இளம்பெண்களை மயக்கிய 6 வயது சிறுவனின் செயல் – வீடியோ

சீனாவில் பல பெண்களை கவர்ந்த 6 வயது சிறுவன் தொடர்பில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 6 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தைக்கு துணையாக முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். அவரது 6 வயது மகன் ஜியாங் ஹாங்க்கி என்ற சிறுவன் கடந்த 2 ஆண்டுகளாக தந்தை முடிவெட்டுவதைப் பார்த்து ரசித்துள்ளான்.

இதையடுத்து தற்போது அந்த சிறுவன் தனியாகவே முடிதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு ஸ்டைலாக முடி திருத்துவதால் சிறுவனுக்காக வரும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும் அதிகளவான பெண்கள் குறித்த சிறுவனிடம் முடி திருத்த ஆர்வம் காட்டி வருகிறனர்.

சமீபத்திய பதிவுகள்