இதனால் தான் மனைவியை விவாகரத்து செய்தேன் காரணத்தை கூறிய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. இவர் 2011-ல் ரஜினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

கடந்தாண்டு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து அளிக்கப்பட்டது. தற்போது விஷ்ணு விஷால் விவாகரத்துக்கான காரணத்தை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக இருந்த ஒரு நபர். சமீபகாலமாக எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்தேன். குறிப்பாக, திரைப்படங்களில் காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்க, பெண்களிடமும் சகஜமாகப் பழகினேன். அப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

‘நீ மாறிவிட்டாய்’ என்ற பேச்சு வந்தது. அப்படியே அது, ‘நான் இந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற்புறுத்த முடியாது. திருமணம் முடிந்துவிட்டது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால், செய்துதான் ஆகவேண்டும். என் மகனின் நலனுக்காக, மனைவியின் நலனுக்காக.

நான் ஒவ்வொரு நாளும் நான், எனது மகனைப் பற்றி நினைக்கிறேன். அவரையும், அவரது அம்மாவையும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஆதரிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான் என்றார்.
.

சமீபத்திய பதிவுகள்